ருத்ராஷத்தின் வரலாறு

 

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.

 

அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் சிந்தனையில் ஆழ்ந்தார் அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராஷமரமாக உண்டானது. அந்த ருத்ராஷ மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம்  கூறினார்.

 

ருத்ராஷத்தின் விவரம்

 

ருத்ராஷ மரம் இலையோ கார்பஸ் வகையைச் சேர்ந்தது. ஆசியா கண்டத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் மலேஷியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவு மற்றும் உலகின் பல பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது. நேபாளம், பீகார், பெங்கால், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், பம்பாய் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. நேபாளம் ருத்ராஷத்திற்கு உலக புகழ் பெற்றது.

 
இந்த மரம் 60 அடி நீள உயரம் வளரும் இதன் பூ வெண்ணிறத்தில் இருக்கும். இலையை விட சிறிய அளவில் இருக்கும். இலையின் கீழ் பகுதியில் உள்ள காம்புகளில் பூ வளரும் பழத்தின் நிறம் சிகப்பும் நீளமும் கலந்திருக்கும் இந்த பழத்தில் உள்ள கொட்டைகளில் அதிகமாக ஐந்து முகமாக இருக்கும் இந்த பழம் ஒரு இன்ச்யை விட பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும். சிறியதாக இருக்கிற ருத்ராஷத்திற்கு சக்தி குறைவு. ருத்ராஷ மரம் தை மாதம் பூ பூக்கும். வருட முழவதும் பூ பூக்கும் என்று கூற முடியாது. சில ஆண்டுகள் வரை பூ பூக்காமலும் இருக்கலாம். ஒரு முகம் ருத்ராஷம், இரண்டு முக ருத்ராஷம் இவை இரண்டும் கிடைப்பது மிக மிகக் குறைவு. எல்லா ருத்ராஷத்திற்கும் முகம் பல எண்ணிக்கையில் இருக்கும். 1 முகத்திலிருந்து 31 முகம் வரை கிடைக்கும். ஆனால் கிடைப்பது ரொம்ப குறைவு. நமக்கு கிடைப்பது 1 முகத்தில் இருந்து 14 முகம் வரைதான். 5 முகம் ருத்ராஷம் தான் இப்போது பரவளாக அதிக அளவில் கிடைக்கின்ளது. இதன் விலை மிகவும் குறைவு.

 

ருத்ராஷம் போல் இரண்டுவகை இருக்கின்றது. ஒன்று பத்ராஷம் மற்றொன்று ரவுத்ராஷம். இந்த இரண்டும் பார்ப்பதற்கு ருத்ராஷம் போல் இருக்கும். பலர் இந்த இரண்டையும் ருத்ராஷம் என்று எண்ணிக்கொண்டு தவறுதலாக அணிந்துக் கொள்கிறார்கள். ஓவ்வொறு ருத்ராஷமும் வேறுபடும்.  21 ஒரு முகத்திற்கு இந்திரமாலை என்று பெயர். ஒவ்வொறு மாலைக்கும் தனித்தனி மந்திரம் இருக்கிறது.

மந்திரம் சொல்லாமல் இருந்தால் கூட உண்மையான ருத்ராஷம் அணிந்தால் மனது அமைதியாக இருக்கும். பாகவதம், சிவப்புராணம் ஆகிய இவை இரண்டிலும் ருத்ராஷத்தைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. ருத்ராஷம் அணிவதால் பாவங்கள் நீங்குவது மட்டும் இல்லாமல் மருந்துளால் குணம் ஆகாத வியாதியைக் கூட ருத்ராஷம் அணிந்தால் குணம் ஆகும்.

இமயமலையில் ருத்ராஷம் பரவலாகக் காணப்படுகிறது. 108 கொட்டை கொண்ட ருத்ராஷ மாலை அணிந்தால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். அல்லது 54 கொட்டை கொண்ட ருத்ராஷமாலை அணியலாம். இந்த மாலையின் நடுவில் மேடு என்றப் பெயரில் பெரிய ருத்ராஷம் இருக்க வேண்டும். ஜெபம் செய்யும் போது இந்த மேரு என்ற இடம் வந்தவுடன் பின்பக்கம் திருப்பி ஜெபம் பண்ண வேண்டும். ருத்ராஷ மாலையில் ஜெபம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேரும்.

ஜெபம் செய்யும்போது:
காலையில் ஜெபமாலை நாபிக்கு சமமாக இருக்க வேண்டும்
நடுபகல் மார்புக்கு சமமாக இருக்க வேண்டும்.
மாலையில் நாசிக்கு நேராக இருக்க வேண்டும்.

எல்லா ஜீவன்களிலும்
உயர்ந்த ஜீவன் மனிதன்
கிரகத்தில் ரவி
நதிகளில் கங்கை
முனிவர்களில் கஸ்யபுடு
தேவர்களில் சிவன்
தேவிகளில் கௌரி
ஆகியோர்கள் உயர்ந்தவர்கள். சர்வதானம் செய்தால் கிடைக்கும் பலனை விட ருத்ராஷமாலை அணிந்தால் அதிகமாக பலன் கிடைக்கும் காசியில் உயர்ந்த ருத்ராஷம் கிடைக்கும். அந்த ருத்ராஷத்தை சுத்தி செய்ய வேண்டும். முதலில் சந்தன நீரில் கழுவி, பிறகு நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஜெபம் செய்யலாம்.

ருத்ராஷம் என்று எப்படி தெரிந்து கொள்வது

இது ருத்ராஷம் உருண்டை வடிவம் கொண்டது. சிவனின் கண்ணில் இருந்து வந்தது. பிரம்ம படைப்பு. இதன் விலை குறைவு. சந்தேகப்பட வேண்டாம். இது சோப்புக்காய் அளவில் கிடைக்கும்.
பத்ராஷம் நீண்டு தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. இது விஸ்வாமித்ர படைப்பு. ஒரு முகத்தில் இருந்து எட்டு முகம் வரை கிடைக்கும். இரட்டை வாழைப்பழம் போல இரண்டு பத்ராஷம் இணைந்து இருந்தால் அதற்கு கௌரி சங்கர் என்று பெயர். மூன்றாக இணைந்து இருந்தால் பிரம்ம விஷ்ணு மகேஸ்வரன் என்று பெயர். இதேபோல் ருத்ராஷம் கூட இருக்கும்.

பிரம்ம புராணத்தில் புளசிய பிரம்மன் யாகம் செய்தபோது வெளிவந்தது தான் சத்ராட்சம் கிடைப்பது மிக மிக அரிது. குடும்ப அமைதிக்கும் மன சாந்திக்கும் இது மிகவும் உகந்தது. காலப்போக்கில் இது அழிந்துவிட்டது ஏதாவது காட்டில் அல்லது யாராவது மகானிடம் இருக்கலாம்.

ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு  இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் 1ஒரு முகம் ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய கோஹத்திய தோஷம்  நீங்கும் என்று கூறினார். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.

ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது.
சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.

நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.

ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை  நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்பழ எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 1 அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையையாவது அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.

ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.

ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன்.  ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.

எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேஷனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.

ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.

பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.

பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.

பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.
பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.
பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.
பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.
பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.
பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.
பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.
இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.
இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.

ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.

ஏழுமுக ருத்திராட்சம் ஜாதகம் சரியில்லாதவர்கள் இந்த ருத்திராட்சத்தை அணியலாம் மற்றும் லஷ்மி கடாட்சம் எற்படும். ருத்திராட்சம் அணிவதால் நம்முடைய கோபத்தை நீக்கும் மனதை சாந்த படுத்தும் நம்முடை வாக்கு பலிக்கும். ருத்திராட்சத்தில் நாம் துலையிட்டால் அதனுடைய பலன் பாதியாக குறைந்து விடும்.பொதுவாக எல்லா ருத்திராஷத்திலும் துவாரம் இருக்கும். சிறியதாக உள்ள ருத்திராட்சத்திற்கு குறைந்த அளவே பயன் இருக்கும். பெரிய அளவு ருத்திராஷத்திற்கு சக்தி அதிகம்.

இந்த ருத்திராட்சம் நீண்ட காலம் நிலைத்து இருக்கும். ஆனால் இந்த ருத்திராட்சம் நமக்குக் கிடைக்காது. காரணம் விலை அதிகமாக இருப்பது. காசி, அரித்துவார், ரிஷிகேஷ், நேப்பாள் போன்ற புண்ணிய தலங்களில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் கிடைக்கலாம். நாம் எவ்வளவு பெரிய ருத்திராட்சம் அணிகிறோமோ அவ்வளவு பயன் கிடைக்கும்.

ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போலியைக் கண்டுபிடித்து விடலாம்.

நாக ருத்திராட்சம்

இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதனை பயன்பாடு அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மற்றும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*