திருச்சிற்றம்பலம்
ஓம் அருள்சித்தகுருப்யோ நம
பதஞ்சலி மகரிஷி தமிழில் அருளிய
யோக சூத்திரம்

                                    குரு வழியே ஆதி ஆதி
குரு விழியே தீபம் தீபம்
குரு மொழியே வேதம் வேதம்
குரு பதமே காப்பு காப்பே !

முகப்புரை

1.இயமம்

2.நியமம்
2.1நாம் எதை தேட வேண்டும்
2.2யோககாரன் யார்?
2.3யோகத்தின் தத்துவம்
2.4ஞானத்தை அடையகூடிய வழி
3.ஆசனம்
3.1ஆண்மகன் யார்?
4.பிராணயாமம்
4.1மனிதனுக்கு மூலதனம் எது?.
4.2 சித்தன் யார்
4.3காற்றுள்ளபோதே தூற்றி கொள்
4.4விதியை வெல்லுவது எப்படி?
4.5பிராணயாமம் எவ்வாறு செய்ய வேண்டும்
4.6ரசவாதம்
4.7ஆதாரம்
4.8பிராணயாமத்தின் செயல்:
4.9சாமி(கடவுள்)யார்.?
5.பிரத்தியாகாரம்
6.தாரனை
7.தியானம்
8.சமாதி
8.1சித்தவைத்தயர் யார்

யோகம்

இந்த யோக சூத்திரமானது மிக அதி நுட்பமான அறிவியல் ஆகும்  (pure natural science)  பதஞ்சலி மகரிஷி அவர்களால் பல கோடி ஆண்டு முன்னர் முக்காலத்திற்யேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது (preplanned).

பலகோடி காலம் கண்மூடி யாமிருந்து
காலத்தால் ஆய்ந்த பெறும் தத்துவத்தை
மேதினிக்கு யாம் அளித்தோம் சீதனமாய்

                                              என்கிறார் பதஞ்சலி மகரிஷி அவர்கள்.

எனக்கு(ராஜா) தமிழில் கிடைத்த யோக சூத்திரத்தை அனைவரும் நலம் பெறவும் யோகசூத்திரத்தில் தெளிவுபெறவும் சில முக்கியமான தகவல் மற்றும் செய்யுள்களை இங்கே வெளியிடுகிறேன். இதில் சொல்லபட்டுள்ள விபரங்கள் மற்றும் அனுபத்தினால் கிடைத்த உண்மையான சூக்குமம் நிறைந்த ரகசியங்களை இங்கே கூறியுள்ளேன். இதில் கூறப்பட்ட சூக்கும ரகசியங்கள் யாவும் வழி தெரியாதவர்களுக்கு வழியாய் இருட்டில் ஒளி விளக்காய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதன் படைக்கபட்டது சாவதற்கு அல்ல!

ஆம் மனிதன் சாகவில்லை அவன் தன்னை தான் அழித்துக் கொள்கிறான். இதை ஏனோ இன்னும் மனிதனால் உணரமுடியவில்லை. எவன் உணர்கிறானோ அவன் அதை பின்பற்ற முடியவில்லை. அப்படி அவன் அதை பின்பற்றி விட்டால் அவனே எல்லா வல்லமையும் படைத்த ஞானி ஆகிறான். இதை தான் நம் முன்னோர்கள் முதல் ஞானிகள் ரிஷிகள் யோகிகள் முனிவர்கள் சித்தர்கள் மற்றும் நாம் கடவுளாக  ஏற்றுக் கொள்ளபட்டிற்கும் தெய்வங்களும் மக்களுக்கு எடுத்து உரைத்தும் அதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் அதை அவர்கள் எடுத்துக் காட்டிய சரியான பொருளை விட்டு  நாம் அழிவிற்க்கு எது தேவையோ அதை நாம் எடுத்துகையாண்டு கொண்டிருக்கிறோம் இதை நாம் தவறு என்று சொல்லமுடியாது ஆனால் அதை நம்மால் திருத்த முடியும். ஆதற்க்கு நாம் பலவழியைவும் கையாள முடியும் ஆனால் அதில் நம் வெற்றியடைய வேண்டும். ஆதற்கு நம் முன்னோர்கள் பலவழியை அங்கே உரைத்து இருக்கிறார்கள்.  அது தான் மணி, மந்திரம், ஒளஷதம், யோகம், ஞானம் என்பதை என் குருநாதர் ஆகிய பதஞ்சலி மகரிஷி மற்றும் கோரக்கர் மற்றும் 18 சித்தர்கள் கூறியதை இங்கே தெரியப்படுத்துக்கிறேன்.

இக்குறிப்பில் முக்கியமான யோகசூத்திர வழி இரகசியமும் அதிசூக்மம் மற்றும் மலைகளின் சூக்மமும் மற்றும் மூலிகைகளின் சூக்மம் அந்தரங்கமாக (மறைமுகமாக) தெரியப்படுத்திபடுத்துகிறேன்  மற்றும் சில முக்கிய குறிப்புகள் (தபஸ்) தவம் சமந்தப்பட்டதும் இங்கே தெரியப்படுத்தபடும். இதை முறையான குரு கொண்டு ஆய்ந்தாலே இதன் உண்மை பொருள் உணரமுடியும் அதுவன்றி வேறு யாருமே அதை உணரமுடியாது.

இன்றைய உலகத்தில் பலரும் பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரத்தை பற்றி சரியான விளக்கத்தை எவரும் புரிந்து கூறவில்லை. அவரவர் தேவைகளுக்கு ஏற்ப அதை மாற்றி கொண்டார்கள்.ஆதனால் உண்மை தன்மை எவரையும் வந்தடையவில்லை என்தே உண்மை.

யோகம்

நற்கருனை வள்ளல்பதம் அஞ்சலித்தே
நவின்றிடுவோம் மைந்தன்தன் நிலைஒட்டி
உற்றதோர் யோகவழி யோகசூத்ரம்
ஒப்பற்ற இதுசூத்ரம் தனைஒட்டி

ஒட்டியே வருகின்ற நிலையாவும்
ஒப்பற்ற படித்தரங்கள் பலபடவாய்
கிட்டவரும் கீர்த்திகளும் மெத்தஉண்டு
கேட்கமேல் இவன்தனக்கு சூத்ரவழி

சூத்ரவழி தானறிய இடரில்லை
செப்பமேல் இதுநூலின் மகத்தவமும்
வாய்த்தநல் தவத்தோர்க்கே தான்தக்கும்
வளமான வாழ்வாங்கு தான்பெறவே.

பெற்றிடவே சகலவித கலைக்ஞானம்
பெருமைசேர் பூதலத்தில் மானிடமும்
வெற்றுடம்பால் அலையாமல் வினைநீக்கி
விவேகங்கள் தான் சுமக்க மார்க்கமுண்டு

ஒன்றுரைக்க அவையடக்கம் மானிடர்க்கு
ஒப்பற்ற ஞானமதை காட்டாது
நன்றுடனே தீததனை ஆய்ந்துநோக்கும்
நன்ஞானம் பெற்றிடவே யாவுமுண்டு

உண்டப்பா அரிசியதே சோரின்பதம்    
உரைக்கமேல் அறைகுருனை கழியுமாகும்   
கண்டிடவே நெய்குருனை கூழுமப்பா  
காட்டினோம் கணக்கறிந்து கண்டுகொள்ளே

(மனிதன் முழு அரிசியின் பக்குவத்தில் இருக்க வேண்டும். அரைகுறையாக இருக்க கூடாது)
யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது

1. இயமம்  என்றால் கோட்பாடு
2. நியமம்  என்றால் நெறி கடைப்பிடித்தல்
3. ஆசனம்  என்றால் உடற்பயிற்சி (உடலுக்குயேற்ப)
4. பிராணாயமம் என்றால் மூச்சு கலை
5. பிரத்தியாகாரம் என்றால் இந்திரியங்களை அந்தர் முகம்படுத்தல்
6. தாரனை  என்றால்  ஐம்பொறிகளை மனதில் லயமாக்குதல் மற்றும் கற்ப மருந்துகள்
7. தியானம்  என்றால் மனதை சீரிய  லட்சியத்தில் செலுத்துதல்
8. சமாதி  என்றால் தியான பொருளோடு ஒன்றுதல்


இயமம் :

கேட்கவே லஷ்ணங்கள் முப்பான்ஈர்
கீர்திசார் தத்துவங்கள் தொண்நூற்றாறு
மாட்சிசார் ஆதாரம் மூவிரண்டு
அறியமேல் அந்தரங்கம் அவ்வாரும்

அவ்வாராய்த் தானிருக்க சிலவிதிகள்
அறியக்கேள் அட்டாங்க யோகம்ஒட்டி
செவ்வையாய் சகலமாந்தர் மீண்டிடவே
செப்பினோம் இதுநூலும் இறையானை

கொள்ளவே இயமத்தின் கூறுபாடு
குற்றமில்லா நன்மனமும் எண்ணமுடன்
கேட்கவே எச்செயலும் தனையொட்டி
கேடற்ற பொதுநிலையின் சார்பொட்டி

ஒட்டியே நிலைநிற்றல் இதனுள்ளே
ஒப்பற்ற வழிபாடு நான்குஉண்டு
கிட்டிடவே ஓதுபவன் ஓதுவிப்போன்
கீர்த்திசார் கேட்பாறும் கேள்விதனை

கேள்விதனை கேட்பாறும் தனையொட்டி
கேட்கமேல் சிலசூக்குமம் இயமவழி
ஆனவே சத்தியம் சங்கல்பம்
இறியமேல் சார்ந்தால் பரசிந்தை.

புறம்இரண்டும் ஆலிங்கனம் தானியற்ற
புகலக்கேள் அமானுஷய சிந்தையுடன்
திறம்படவே எக்கணமும் பரசிந்தை
திகழமேல் மற்றநிலை கருதவேண்டா

வேண்டவே உலகநிலை தனையொட்டி
விருப்பம்போல் உணவாதி சம்போகம்
துண்டவே காமாதி கண்டிடினும்
துலங்கவரும் சிந்தையதும் சுடலன்ன?

என்னவே எக்கணமும் குருசிந்தை  
அறியமேல் குருவழியில் தெய்வசிந்தை  
உண்ணதமாய் தெய்வம்ஒத்து ஞானசிந்தை 
உரைக்கமேல் இயமநிலை படலம் ஒன்று.

விட்டதுடர் அட்டாங்க யோகசூத்ரம்
விரிக்கவே மானிடத்தில் நிலைஒட்டி
கிட்டவரும் காரணங்கள் கோடிஉண்டு
கீர்த்திசார் யோகத்தின் சாரமவ்வார்

அவ்வாராய் தானிருக்க இயமத்தின்
அறியநல் கோட்பாடு தன் கேளாய்
செவ்வையாய் தானறிய தேகத்துள்ளே
சீர்தூக்க உடலங்கள் சதுரமுண்டு

உண்டப்பா தூலமொடு சூக்மமாய்
உரைக்கமேல் காரனமும் காரணகாரியம்
கண்டிடவே இதனுள்ளே செயல்பாடு
கருத்தறிய தத்துவங்கள் அனந்தமுண்டு

உண்டதுவே இதனுள்ளே சில சூக்மம்
ஒப்பறிற நிலை நான்கில் தத்துவங்கள்
கண்டிடவே முன்உரைத்த மெய்ப்பாட்டின்
காரணத்துள் அடங்கவரும் இதனுள்ளே

உள்ளபடி சாக்கரமொடு சொப்பனமும்
உயர்வான துர்யமுடன் துர்யாதிதம்
விள்ளவரின் நுணுக்கமுள்ள இயக்கங்கள்
விரிக்கவே தேகத்துள் அடங்கும்காண்

காணவே இதனுள்ளே எண்ணங்கள்
கருதவே நன்நோக்க சிந்தனையும்
ஆனபடி அகஒழுக்கம் தனைஒட்டி
அறியமேல் இயமத்தின் கூறுகாணாய்

காணவே அகஒழுக்கம் நற்சிந்தை
கருதியநல் எண்ணங்களும் தூய்மையுற
பேணவரும் கண்செவி வாய்மணம்
பெருமைசேர் நாசியுடன் பஞ்வசேந்தரியம்

இந்திரியங்கள் தமைஒட்டி அவாவெறுத்தல்
பகரமேல் இதனுள்ளே ஞானம்வளர்
எந்தநிலை நின்றாலும் அற்றபற்றில்
இயம்பக்கேள் பரம்பொருளும் தக்கும்காண்

காணவே இதன்ஒத்து மைந்தனுக்கு
காட்டியநல் இயமத்தின் உனுறுஒட்டி
ஆனபடி யோகமாம் இரண்டதனின்
அறியதோர் நியமத்தின் நிலைகேளாய்

நியமம்

ஒதக்ககேள் யோகவழி ரகசியங்கள் 
ஒப்பற்ற யோகங்கள் எட்டினுள்ளே  
ஆதரவாய் தானறிய இயமம்பின்
அறியவரும் நியமத்தின் கோட்பாடு

கோட்பாட்டை தானுரைக்க இதனுள்ளே
குறிக்கவரும் சூட்சமங்கள் அனந்தமுண்டு
வாய்த்தநல் மானிடத்தின் தேகவழி
வளரவரும் அதிசூக்ம நிலைமெத்த

மெத்தவே தேகவழி கண்டபெரும்
மேலான எந்தரியம் தனைஒட்டி
நத்தவரும் யோகநெறி தனைகாக்க
நவிலக்கேள் முன்வநிலை தானறிய

அறியவே சத்துஎன்னும் மாஞானம்
அறியப்பின்  சித்துஎன்னும் அரூபஞானம்
தெரியவே ஆனந்தம் பூரணஞானம்
புகலவரும் சச்சிதானந்தம் கேளாய்

காணவே இதுவழியில் நியமம்ஒத்து
கருதவே ஆகார விதிகள்ஒத்து
பேணவரும் ஆதார சுருதிஉண்டு
பேசக்கேள் பதார்தங்கள் தமைஒட்டி

ஓட்டிவே சாதகமும் ஜாமங்கள்
ஓப்பற்ற பத்தினுள் பிரம்மமுகூர்த்தம்
கிட்டவரும் கடைஜாமம் தனைஒட்டி   
கருதவரும் வைகறையில் துயில்எழவே

துயில்எழவே அக்கணத்தே பருவநிலை
தூய்மையுடன் வாயுமற்றும் மந்தகாசம்
பயிலவே திரிகரண சுத்திஒத்து
பலமான ஆசனத்தின் வழிஒட்டி

ஒட்டியே தந்தசுத்தி கபசுத்தி
உரைக்கவரும் குடல்சுத்தி தனையியற்றி
கிட்டிடவே மனநிலையில் மனோரம்மியம்
கேட்கவே அதுமேலாய் ஆசனவழி

ஆசனத்தின் விதிதன்னை அறியவரின்
அறியமேல் பலபடவாய் தான்உண்டு
நேசமுடன் ஈதுரைக்க நலம்மெத்த
நவிலக்கேள் இதன்ஒட்டி ஆசனவிதி

நாம் எதை தேட வேண்டும்

மூடதனம் மானிடத்தில் ஏதுஏது    
முயற்சி மேல் ஞாமைதில் அறிவு ஒன்றே  
தேடதக்க பொக்கஷிமாம் ஐயமில்லை   
தேகம் மற்றும் ஆயுளட நிலைதனைக்கொன்டே
கொண்டு தான் பூதலத்தில் ஆசை கொள்ள 
குறிக்கேள் நலம் இன்றி போகம் என்ன.
                                                                             – பதஞ்சலி மகரிஷி

தேகத்தை வலுபடுத்தி ஆயுளை அதிகரித்து முயற்சியால் ஞானத்தை அடைய வேண்டும் மற்ற எவற்றை தேடினாலும் அதுவே நமக்கு அழிவிற்கு வழி வகுக்கும்.

யோககாரன் யார்?

 மேற்கூறிய எட்டு நிலைகளையும் கையாள்பவனே யோககாரன் ஆகிறான்.ஆனால் இன்று உலகத்தில் மேற்கூரிய எட்டு நிலைகளில வெறும் ஆசனத்தை மட்டும் கையில் எடுத்து கொண்டு யோகாசனத்தை கற்று தருகிறேன் என்று பலரும் தவறாக சொல்லி கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். பொன் பொருளை தேடிக்கொண்டு தான் யோககாரன் என்கிறார்கள்.அவர்கள்  யோககாரர்கள்  அல்ல போககாரர்கள்

யோகத்தின் தத்துவம்

  சாகாமல் தன்னை தானே அறிதல் 

யார் ஒருவர் தன்னை தானே அறிய வேண்டும் என்று நினைபவர்கள் அவர்கள் யோகத்தில் உள்ள எட்டு நிலைகளையும் முயற்சியாலும் வைராக்கியத்தாலும் கையாளவேண்டும்  இது ஆரம்பத்தில் சற்று கடினம். முயற்ச்சித்தால் பலன் நிச்சியம்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்ச்சி
தன் மெய்வருத்த கூலி தரும.
– திருவள்ளுவர்

மனதை அடக்க பதஞ்சலி மகரிஷி கூறும் வழி

எண்ணவே எக்கணமும் குரு சிந்தை  
அறியமேல் குரு வழியே தெய்வசிந்தை  
உண்ணதமாய் தெய்வம் ஒத்து ஞானசிந்தை  
சிந்தையொத்து வாசியதும் தானடங்கும்  
சிந்தையொத்து விகாரங்கள் தன்ஒழியும் 
சிந்தையொத்து ஐம்புலனும் தான் ஒடுங்கும்
சிந்தையொத்து மாமௌனம் தான் நிகழும்.
                                        —– பதஞ்சலி மகரிஷி

ஒருமையில் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் எம புடைத்து                          – திருவள்ளுவர்

எவன் ஒருவன் ஜம்புலனையும் ஒரு கண நேரம் அடக்கியாள வேண்டும் என்று நினைக்கிறானோ அந்த நினைப்பின் பலன் அவனுடைய ஏழு பிறப்பிற்கும் உடன் வரும் என்பதே இதன் பொருள்.

தக்கதோர் மனமது செம்மைமானால்
தாட்டியமாய் இம்மந்திரம் தான்குறையும்
– பதஞ்சலி மகரிஷி

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.
—-அகத்தியர்

ஞானத்தை அடையகூடிய வழி :

மணி, மந்திரம், ஒளஷதம், யோகம், ஞானம்

மணி : மணி என்பது நமது உடலில் உள்ள இந்திரியத்தை இறுக செய்து(மணியாக்கி) நமது ஆதாரத்தில் மேலே ஏற்றி அமிர்தத்தை உட்கொள்வதால் ஞானத்தை அடையலாம்.

மந்திரம் : மந்திர சொற்களை பயன்படுத்தி மனத்தை செம்மையாக்கி ஞானத்தை அடைவது

ஒளஷதம் :ஒளஷதம் என்பது காய கற்ப மருந்தை உட்கொள்வதால் ஞானத்தை அடைவது. காய கற்ப மருந்தின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் எனில் மனம் காத்து, குணம் காத்து, உடல் காத்து, உயிர் காக்கும். (முதலில் மனத்தை காக்கும் இரண்டாவது குணத்தை காக்கும் மூன்றாவது தேகத்தை சித்தியாக்கும் இறுதியில் உயிர் காக்கும்.)

யோகம் : இந்த யோகத்தில் மட்டும் தான் மணி மந்திரம் ஒளஷதம் என்ற இந்த மூன்றையும் பயன்படுத்தி  எளிய முறையில் ஞானத்தை அடைவதாகும்.

ஞானம் : பிறவிலேயே ஞானியாக பிறப்பது.

கேட்கவே மந்திரத்தால் ஞானசித்தி  
கீர்த்திசார் ஒளடதத்தால் தேகசித்தி     
மாட்சியுள்ள ஞானத்தால் யோகசித்தி     
மகத்தான மூன்றுவழி சர்வசித்தி
3.ஆசனம் : 

பத்திரம் வீரம் பதுமம் கோமுகம் குக்குடம் ஆகிய ஜந்தும் ஞான சாதனத்துக்குரிய ஆசனமாகும். மிகவும் சிறந்த ஆசனம் பத்மாசனம் ஆகும் ஏன்யென்றால் இரண்டு பாதங்களைம் நமது தொடை மேல் வைத்தால் நாம் செய்த பாவங்கள் அகன்று விடும் அதாவது (பாவ நாசம் என்பதே பத்மாசனம்) அந்த பத்மாசனம் நமது உடலில் உள்ள அனைத்து நாடி நரம்புகள் மற்றும் உறங்கி கொண்டிருக்கும் 24 நாடி நரம்புகளை தூண்டிவிடும் தன்மை கொண்டது. பன்னிரண்டு அங்குலப் பிரமாணம் அதாவது ஒரு ஜான் எழுபத்தீராயிரம் நாடிகளின் பலத்தைச் சோதிக்க வேண்டுமாயின் அதற்குச் சத்தி சலனமாகிய குண்டலி அப்பியாசமின்றி வேறு சுத்தி செய்யும் உபாயமில்லை.

ஒதக்கேள் இவன்தனக்கு யோகசூத்ரம்
ஒப்பற்ற யோகம்பின் இயமம் நியமம்
ஆதரவாய் தான்கண்டு ஆசனவழி
ஆறியக்கேள் ஆசனமும் விசித்ரமாய்

விசித்திரமாய் தானறிய தேகம்ஒத்து
விரிக்கவரும் யோகநிலை தனையாயின்
இசைவுடவே ஒதவரும் ஆசனங்கள்
இயம்பக்கேள் எட்டெட்டும் தான்உண்டு

ஊண்டப்பா அன்னவையில் தலையாய 
ஓப்பற்ற ஆசனமும் பத்மம்ஒக்கும் 
கண்டிடவே முன்உரைத்த காலம்ஒட்டி
கருதமேல் மனத்தியல்பை தானாய

ஆயவே உள்நோக்கு உள்நோக்கு
அறியவரும் அந்தரமும் தனைஒட்டி
நேயமுடன் ரேசகம் கும்பகம்
நவிலவரும் ஸதம்பனமும் தான்உண்டு

கட்டவே எவ்விதத்தும் இடரில்லை
கனமான வாழிவின்நிலை கண்டிடவே
கிட்டியநல் மானிடத்தின் தேகதத்வம்
கேடுரவே சிதையவிடின் முடத்தனம்

மூடத்தனம் மானிடத்தில் ஏதுஏது?
முயற்சிமேல் ஞானமதில் அறிவுஒன்றே
தேடத்தகும் பொக்கிஷமாம் ஜயமில்லை
தேகம்மற்றும் ஆயுள் நிலை தனைகொண்டே
கொண்டுதான் பூதலத்தில் ஆசைகொள்ள
குறிக்ககேள் அர்ப்பனுக்கு ஆசைஎன்ன
விண்னுரைக்க ஆயுள் அன்றி தாகம்என்ன
விரிக்கமேல் நலம்இன்றி போகமென்ன

3.1ஆண்மகன் யார்?

என்னவே மானிடத்தின் இச்சையெல்லாம்
இயம்பக்கேள் எக்கனமும் பொருள்மயக்கம்
கண்டிடவே காமாதி விகாரங்கள்  
தட்டியமாய் விரட்டியவன் ஆண்மைஉள்ளோன்

ஊள்ளபடி ஆசனத்தின் விதிமுறையை
உணர்த்தமுன் சிலவிதிகள் தான்கொள்ள
விள்ளுவோம் ஆசனத்தின் மறுபாகம்
விபரப்படி தானறிய ஈர்படலம்

ஒப்பற்ற சூத்திரத்தின் பாகம்தன்னை
ஒதக்கேள் ஆசனத்தின் விதிமுறைகள்
தப்பில்லா நெறிமுறைகள் தலைஒட்டி
தாட்டியமாய் கடைதேற கீர்த்திஉண்டு

உண்டப்பா திக்குகளும் எட்டுஒக்கும்
ஒதவரும் இந்திரனும் அக்னியும்
கண்டிடவே எமன் நிர்குதிஒத்து
கனமான வர்ணனுடன் வாயுகேளாய்

கேட்கவே வாயுஒட்டி குபேரனும்
கீர்த்திசார் ஈசானியம் அட்டம்ஒக்கும்
மாட்சியுடன் இவ்வெட்டில் பூகர்ப்பஇயல்ஒத்து
மகத்தான யோகவழி தான்செய்ய

சாய்ந்துதான் ஈசன்ய நிலைஒட்டி
சாற்றவரும் மைந்தனுக்கு சில சூக்மம்
ஆயவரின் முன்குறித்த காலம்ஒட்டி
அறியக்கேள் தோல்துகில் தர்பைமற்றும்

மற்றும்வரும் மரவகையும் தனைஒட்டி
மைந்தனுக்கு ஆரோக்ய நிலைஒத்து
உற்றதோர் நிலையறியின் முன்றோனும்
ஒப்பற்ற சனியாகி நாலில் நிற்க

நிற்கவே எவ்விடத்தும் இடரில்லை
நவிலக்கேள் நாவதும் ஏற்றம்உண்டு
அற்புதமாய் தானறிய குருவருளால்  
அறியவே இவன்தனக்கு சித்தி மெத்த

உண்டப்பா ஆசனவிதி தான்கேட்கின்   
ஒப்பற்ற ஈசான்ய வழியொத்து   
கண்டிடவே அக்கினியும் வலமுகமாய்   
கருதப்பின் வாயுவதும் இடமுகமாய்

இடமுகமாய் தானிருக்க  சூரியனும்   
இயம்பக்கேள் அக்னியாய் பிங்கலையாய் 
இடகலையும் சீதனமாய் வாயுவதாய்
இயம்பவரும் பூகற்ப நிலையொட்டி

ஓட்டிவே தானறியின் மனத்தின்நிலை
தெரியாது ஒழியாது பராந்தியுற
கிட்டிடவே அனன்தனை தான்அடக்க
அங்குசமும் வைராக்ய நிலையாக்கும்

ஓக்கவே மும்மத யானைதன்னை
ஓப்பற்ற அங்குசமும் அடக்கினாற்போல்
தக்கதோர் மனமென்னும் விகாரம்
தாட்டியமாய் எக்கணமும் இடர்காட்டும்

காட்டவே பிரபஞ்சம் பெருவட்டம்
பருதப்பின் ஜடமதுவும் சிறுவட்டம்
நாட்டமுடம் நினைவோட்ட நெஞ்சதுவம்
நவிலக்கேள் அதனுள்வே உள்வட்டம்

வட்டத்துள் வியாபித்த ஜடமற்ற
வாகான வஸ்ததுவும் மனம்எண்ணில்
இட்டமுடன் தான்நிறுத்த வலிமையுண்டு
இயம்பக்கேள் வல்லார்க்வே யாவுமுண்டு

பாவையை தானெய்வான் அட்டியில்லை
பாரப்பா பூதலத்தில் மானிடர்கள்
தேவையின்றி தான்ஜெனித்து பலன்என்ன
திகலவரும் பட்டிமாடு போலன்ன

அன்னவே பிறவிகளின் தத்துவங்கள்
அறியக்கேள் மென்மேலும் ஆயஆய
புரியவே பலபடவாய் புராணங்கள்
புகாவொண்ணா மெங்ஞான விளக்கமுண்டு

உண்டப்பா இதனுள்வே ஆசனத்தின்
ஒப்பற்ற நிலைகேட்கின் ஒர்சூக்மம்
கண்டிடவே தாமரையின் நிலையொத்து
கட்டுரைக்க மனனென்னும் நிலைதன்னை

நேர்தியாய் தான்ஒட்டி வலதுபாதம்
நவிலவரும் இடத்துடையில் தான்விரிக்க
பார்க்கவே இடப்பாதம் தனையொத்து
பத்மம்போல் வலத்துடையில் தான்நிறுத்த

நிறுத்தவே இருபாத வெளிமுகங்கள்
நவிலவரும் இடுப்பதனை தான்நோக்க
கருத்துடவே பின்முதுகு தன்டதுவும்
கருங்காலி கட்டைபோல் தான்நிற்க

நிற்கவே இதானொத்து பூகற்ப
நவிலவரும் நிலையாயின் வாயமற்றும்
உற்றபல ஒளிஒசை நாற்றம்மற்றும்
உரைக்கவரும் பிறவகை எண்ணநிலை

எண்ணநிலை தனையொட்டி ஒர்முகமாய்
இயம்பக்கேள் சிங்கரூப ஆவாகனம்
திண்ணமாய் முன்னெழுந்த நிலையன்ன
திகலவரும் காட்சியொடு சுழி நோக்க

உண்டப்பா பூதலத்தில் ஞானமெல்லாம்
உள்ளபடி மானிடர்க்கு பூஜ்யமாய்
கண்டிடவே ஞானமின்றேல் ஆவதென்ன
காலத்தால் கட்டையாய் செல்லாமல்

செல்லாமல் தேகவழி தத்துவத்தை
சீர்தூக்கி தான்ஆய ஞானமுண்டு
வல்லார்க்கு எல்லாமும் தானுண்டு 
வயாக்கவே குருவருளால் யாவுமுண்டு

4.பிராணாயாமம்
4.1மனிதனுக்கு மூலதனம் எது?.
வாயுவே மனிதனுக்கு மூல தனம்
அதை மறந்தால் ஏதுதனம்.
— பதஞ்சலி மகரிஷி
வாயு : வாயுமொத்தம் பத்து

1.பிராணன் :பசி தாகங்களை உண்டாக்கி உணவுகளை     ஜிரணிக்க செய்யும்
2.ஆபானன்  : மலக்காற்று ஆண் பெண் இன்பச்சுரப்பிகள்
3.வியானன் : தொழிற்காற்று  ஸ்பரிசங்களை கிரகித்துணர்த்திகலைகளை நிறைவிக்கும்.
4.உதானன் : ஒலிக்காற்று
5.சமானன் : உணவின் சாரத்தை நாடிகளுக்கு சமமாகட் பங்கிட்டு உடலை வளர்க்கும்
6.நாகன் : வழிக்காற்று
7.கூர்மன் : இமைக்காற்று
8.கிருகரன் : தும்மற்காற்று
9.தேவதத்தன் : கெட்டஆவி(கொட்டாவி)காற்று விக்கலையும் உண்டுவிக்கும்
10தனஞ்செயன் :வீங்கல் காற்று மனிதன் இறந்த பின்னும் உடலில் இருந்து நாற்றத்தை உண்டுவித்து இறுதியில் கபாளத்தை பிளந்து கொண்டு போகும்.

இந்த வாயுவை எவராலும் கட்டுபடுத்த முடியாது.

4.2சித்தன் யார்?
நில்லாத காற்றதனை
நிலை என்ற உள்ளடக்கி
செல்லாத வைக்கின்றவனே
சித்தன்.
— பதஞ்சலி மகரிஷி
(அல்லது செத்தவன் ஆவான்.)

4.3காற்றுள்ளபோதே துற்றி கொள்

காற்றுள்ளபோதே துற்றி கொள் என்பதன் பொருள் யாதெனில் நம் உடம்பில் காற்று இருக்கும் போதே நாம் செய்ய வேண்டிய யோகத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதாகும்.

4.4விதியை வெல்லுவது எப்படி?
விதியை மதியால் வெல்லாம் என்பது பழமொழி இங்கே மதி என்பது இடகலை பற்றியது. அதாவது இடகலை பற்றி எறினால் விதியை வெல்லாம் என்பது இதன் தத்துவம்.

4.5பிராணயாமம் எவ்வாறு செய்ய வேண்டும் :

பிராணயாமம் என்பது வாயுநிலை பற்றியது. மனம் பிராணன் என்னும் இரண்டுள் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றுங் கட்டப்படும். ஆதலால் மனம் ஒடுங்காதவரையில் வாசனை நசியாது. வாசனை நசியாத வரையில் சித்தம் நசியாது சித்தம் நசியாத வரையில் தத்துவ ஞானம் உண்டாகாது.

பிராணயாமம் என்பது :

பிராணயாமம் என்பது இடகலை பிங்கலை மற்றும் சுழமுனை என்று மூன்று நிலை இருக்கின்றன. அனைவருக்கும் தெரியும் மனிதனால் 21600 வாசம் நடைபெறுகிறன. இதில் இடகலை என்பது மதி என்றும் சந்திரன் என்றும் கூறுவர். பிங்கலை என்பது ரவி என்றும் சூரியன் என்றும் கூறுவர். ஆறு ஆதாரங்களில் ஒவ்வொரு ஆதாரங்களிலும் பல சுவாச எண்ணிக்கைகள் நடைபெறும். இது பிராணயாமம் பழக பழக தெரியவரும். காலை 3லிருந்து 4.30மணிக்குள் பிராணயாமம் செய்ய ஏற்ற நேரம்.

பிராணயாமம் எவ்வாறு செய்ய வேண்டும்

அதிகாலை எழுந்து மலசுத்தி செய்து குளித்து முடித்து தோல் துகில் தர்பை இதில் எதாவது ஒன்றை விரித்து அதன் மேல் வடக்குகிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர வேண்டும் இதை பிரம்ம மூகூர்த்ததில் செய்வது மிக நல்லது. தூய காற்று நமது உடலுக்கு செல்லும். வெண் துகில் மிகவும் சிறந்தது ஏன்யென்றால் அது மனதை சாந்த படுத்தும். நமது இட நாசி வழியாக மூச்சு காற்றை மெதுவாக உள்ளிழுத்து அதை வயிற்றுக்குள் சிறிது நோடிகள் அடக்கி அக்காற்றை வலது நாசி வழயாக மெதுவாக வெளி விட வேண்டும். பின்பு வல நாசியில் மூச்சு காற்றை உள் இழுத்து (சில நோடிகள் நிறுத்தி) கும்பகம் செய்து இட நாசியில் வெளி விட வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்வென்றால் வயிற்றுக்குள் காற்றை தம்பனம் செய்யும் போது நாம் காற்றை அழுத்த கூடாது. அப்படி அதிகமாக அழுத்தினால் குடல் இறக்கம் உண்டாகும். ஏச்சரிக்கையாக செய்ய வேண்டும். இந்த காற்றை உள் இழுப்பதற்கும் வெளிவிடுவதற்க்கும் சில நாழிகையும் உண்டும் அதை ஆரம்பத்தில் செய்ய முடியாது. அது குருவழியாய் தெரிய வரும். இந்த பயிற்ச்சியின் போது நமது கண்கள் இரண்டும் மூடி சுழுமுனை (புருவ மத்தியில்) பார்க்க வேண்டும் இப்படியே தனந்தோறும் 15 நிமிடம் செய்தால் போதும்  இந்த பிராணயாமத்தின் போது மந்திர உச்சாடனம் செய்ய வேணடும் கூறிப்பாக  காற்றை கட்டுபடுத்த கூடிய மந்திரத்தை உபயோகிக்க வேண்டும். ஆதற்கு ஒம் அம் உம் நம் என்ற  மந்திரத்தை கும்பகம் செய்கின்ற போது கூற வேண்டும்.(பயிற்ச்சியின் போது மட்டும்)

பிராணயாமத்தின் போது நமது உடலில் உள்ள நவ வாசல்களுக்கும் நவ தேவதைகள் காவல் இருப்பார்கள். இதனால் நம்மை பேய் பில்லி சூன்யம் ஏவல் எதும் நம்மை வந்து சேராது.

எந்த ஒரு மந்திரத்திற்கும் மருந்துக்கும் எதற்குமே குருவழியே வருவது பலன் தரும். குரு இல்லாமல் பலன் வராது. நமக்கு குரு கிடைப்பதற்கு மேலே கூறிய பிராணயாமம்  ஆசனம் மந்திரம் இம் மூன்றையும் விடாது வைராக்கியத்தோடு பயிற்சி செய்தால் நமக்கு குருவின் வல்லபத்தால் பலன் கிட்டும்.

தொட்டு காட்டாத வித்தை
சுட்டு போட்டாலும் வராது
—பழமொழி .

குரு தொட்டு காட்டவில்லையென்றால்  நாம் சுடுபாட்டில் தீயிற்கு இறையானாலும் தெரியாது என்பதே இதன் பொருள்.

ரசவாதம் :
ரசவாதத்தில் எத்தனை முறை தான் தீயில் சுட்டு சுட்டு போட்டாலும் தங்கமாக மாறாது குரு வந்து சொல்லாத வரையில். ரசவாத்தை சித்தர்கள் சொல்லியுள்ளது அவர்களுடைய அவசர இக்கட்டான தேவைக்காக. மனிதன் ஒரு வேளை ரசவாத்தை பூர்வபுண்ணியத்தால் செய்கிறான் என்றால் செய்முறையின் போது உண்டாகும் நெடியானது அவனது மனத்தை செம்மையாக்கி ஞானியாக்கிவிடும் இது தான் இதனுடைய அந்தரங்க சூக்குமாகும்.

தெய்வத்தன்மை பொருந்திய நூல்களின்  பொருளடக்கங்களை யெல்லாம் வடித்தெடுத்த சாரமகிய பஞ்சட்சர மந்திரத்தை குருமுகமகாகவே பெறவேண்டும் என்பது விதி.

ஆதாரம் : நமது பேச்சு வழக்கில் ஆதாரம் உள்ளதா என்று கேட்போம். அந்த ஆதாரம் என்பது நமது உடலில் உள்ள ஆறு ஆதாரம் ஆகும். மூலாதாரம் மணிபுரகம் சுவாதிஸ்டானம் விசுத்தி அனாதகம் ஆக்ஞை

பிராணயாமத்தின் செயல்:

சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச்சென்று வரும் சந்திர கலை நடக்கும் போது 312 பாகமாகிய மூளையில் சென்று வரும். பிராணயாமத்தின் போது நாம் உள் இழுக்கும் மூச்சு காற்று மூலாதரத்திற்கு சென்று அங்கு உள்ள நாதத்தில் காற்று பட்டு நாளாக நாளாக இருக செய்யும். இருகிய நாதம் ஆனது மூலத்தில் இருந்துமேலே ஏறி சுவாதிஸ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆக்ஞை வந்தடையும். ஆப்போது சுழிமுனை திறக்கும் அமிர்தபால் துளி துளியாக நமது உள் நாக்கில் பரவும். உடம்பு காயசித்தி பெறும்  அப்போது நமக்து கண்டறியா கேட்டறியா ரகசியங்கள் வெளி கானும் மூலாதரத்தை விழிக்க செய்யத உடனே நமக்குள் இருக்கும் அன்மா நம்மொடு உரையாடும் நம்மை வழி நடத்தும். ஏதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று கூறும் பல ரகசியங்கள் கூறும். இதையெல்லாம் சித்தர்கள் மறைப்பாக அனைத்து நூல்களிலும் கூறியுள்ளார்கள். நான் இங்கே அனைவரும் நலம் பெற வேண்டி தெரியபடுத்துகிறேன்.

சாமி(கடவுள்)யார்?

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுண என்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

கோயிலுக்கு உள்ளிருக்கும் கல்லால் செய்யபட்ட சிலைக்கு பூக்களால் அலங்கரித்து வாய்குள் மந்திரத்தை முனு முனுவேன சொல்லி வந்தால் அந்த கல் தான் பேசுமா! பேசாது. நமது உடலில் நாதன் உள்ளிருக்கையில் கறிசட்டிக்கு சுவை தெரியுமோ! தெரியாது. ஆதலால் உள்ளிருக்கும் நாதனை எந்நாளும் வணங்கவேண்டும்

தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம்
தகப்பனும் தாயும் அங்கே புணரும் போது
நான் என்று கருப் பிடித்துக் கொண்டு வந்த
நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு.
—-அகஸ்தியர்

ஆறாவ காட்டிஎம்மை ஆட்கொண்ட
ஆப்பன்பதம் அஞ்சலித்தே யோகநிலை
கூறவே யோகங்கள் எட்டினுள்ளே
குறிக்கவரும் பிராணயாமம் தமைகேட்கின்

கேட்கவே பூதம் ஜந்தின் நிலைஒத்து
கீர்த்திசார் அனுபூதி தனைகொண்டு
மாட்சியுடன் தேகநிலை ஆயநலம்
மகத்தான தத்வங்கள் இதனுள்ளே

வழிகோலாய் தானிருக்க இடரில்லை
வாய்த்தநல் மைந்தனுக்கு ஒர்சூக்மம்
அழியாத காயமதை தானியற்ற
அறியவரும் கர்ப்பங்கள் அனந்தமுண்டு

உண்டப்பா பிடரியுள் ஒடும்நாடி
உரைக்ககேள் பேரண்ட அளவுகோலாம்
கண்டிடவே சூக்மநாடி தனைஒட்டி
கருதமேல் பின்முதுகு தண்டுஒத்து

ஒத்துத்தான் மேதகு நாடிஎன்னும்
ஒப்பற்ற சூக்மநாடி தனையாயின்
மெத்தவே குண்டலிமுதல் கபாலம்வரை
மென்மையுடன் நுணுக்கமாய் தான்செல்லும்

ஒக்கவே வாயுநிலை தானாயின்
ஒப்பற்ற பிராணனே ஜிவனாக்கும்
தக்கநல் பிராணனுடன் சார்ந்திருத்தல்
தகைவின்ற  மத்தின் நிலைக்கொள்க

வேண்டுமப்பா மானிடத்தின் மகத்துவத்தை
விருதாவாய் காடேறி மேயுமாடு
தண்டவரும் இதுதத்துவம் தானுணரா
துலங்கவரும் மெய்ஞானம் புலம்பல்ஒள்

எங்கேயப்பா மனப்பேயும் தானொழிய
இரண்டறக் கலக்கம்நிலை பிராணயாமம்
பதுகமின்றி தனித்தனியாய் தானுரைப்போம்
பகரக்கேள் முதற்படலம் பிராணயாமம்

ஒப்பவே மனமதுவும் செம்மையாக
ஒப்பற்ற மனமேலாய் யாக்கையதும்
தக்கதோர் கூடெமவே தானறியின்
தகைசான்ற பிராணனதும் மனத்தினுள்ளே

உள்ளபடி தானசையா தன்மையதும்
ஒப்பற்ற பேதமற்ற தன்மையெங்கும்
கள்ளமில்லை நினைவதுவை ஒர்நிலையாய்
பாட்டிமுன் உவமையொட்டி பயில நலம்

நலமறிய மனமதும் தைலதாரை
நவிலக்கேள் எண்ணங்களும் ஓர்நிலையாய்
பலமான எண்ணங்கள் தானுதிக்கும்
பகரவரும் பெட்டவத்துள் மனம்நிற்க

நிற்கவே பிராணநிலை மானறியின்
நவிலவரும் ஓரெண்ணம் ஓர்நினைவு
அற்புதமாய் மனவலியின் ஆக்கமதும்
அசையாது தானிருத்தல் தவஇலக்கு

இலக்கொட்டி ஆடாது அசையாது
ஏண்ணமதை தான்நிறுத்த ஆத்மநிலை
கலக்கமில்லா தன்மையொட்டி தான்நிற்கும்
கருதுவது பிராணாயாமம் நிலையொக்கும்

ஒக்கவே அகன்டகார வெளிநடுவில்
ஒப்பற்ற பிராணவாயு தானிழுத்து
தக்கதோர் குண்டலிமுதலி கபாலம்வரை
தாட்டியமாய் பிராணசுத்தி இயற்றமேலாம்

தத்துவமாய் தானறிய தான்தோன்றி
தாட்டியமாய் தானடங்கல் பிரணாயாமம்
மெத்தவே இருகலையின் விதிதன்னை
மேலான தாரணையில் தான்விரிப்போம்

பிரத்யாகாரம்

யோகமாம் அட்டாங்கம் தனைஒட்டி
உள்ளபடி தானறிய சுருதிகளும்
தேகதத்துவாம் தனைஒட்டி பலபடவாய்
தெளிந்துபல ஞானங்களும் கோடிஒக்கும்

நிற்கவரும் அனுவுக்கு அனுவாகி
நிலையான தன்மைஒத்து தானறிய
அற்புதமாம் இடகலை பிங்களை
அறியதோர் சுழுமுனை தனைஒத்து

ஆக்கம்ஒட்டி பிரத்யாகார நிலைஒத்து
ஆறியக்கேள் நடுக்கமில்லா ஆண்மைஒத்து
ஊக்கமுடன் மென்மேனும் தான் உணர
ஊள்ளபடி எவ்விதத்தும் இடரில்லை

இடரில்லை இதுவிதியாய் தானறிய
இனையில்லா தொன்னுற்று ஆறுதத்வம்
திடமுடனே பயிற்றுமுறை தனைஒட்டி
தெளிவிப்போம் பிரத்யாகாரம் மூலம் நான்கு

சூக்குமநிலை தானறிய பிரத்யாகாரம்
செப்பவே இயமமுடன் நியமம்ஒத்து
ஊக்கமுடன் தபோநிலை தனையன்றி
ஊள்ளபடி பிறவிக்கி பெருமையன்று

அன்றியும் தபோநிலை தனைஒட்டி
அப்பனே எக்கனமும் திரிகரணம்
நன்றுடனே சுத்திஒத்து நலம்ஒக்கும்
நவிலக்கேள் ஊர்த்துவமாய் சிந்தனைகள்

சிந்தனைகள் தானறிய மென்மேலும்
ஊள்நோக்கி உள்நோக்கி எண்ணமதை
நிந்தையின்றி தான் செலுத்த இடரில்லை
நவிலவரும் எண்ணமதை அசையாமல்

இருக்கவே இதன்சூக்மம் அளப்பறியா
எண்ணமதை அடைகாக்க அடைகாக்க
திருத்தமுடன் அவ்வென்னம் ஊர்த்தவமாய்
திகழவரும் திருஜோதி தானாகி

ஆகியே பலபடவாய் நலம்காட்டும்
அப்பனே ஞானவாகிஸ்டம் தனைஒத்து
தேகமதும் காந்தியாய் தான்ஒளிர
திவ்வியமாய் மனமதுவும் சந்துஸ்டி

சந்துஷ்டி எய்திடவும் மார்க்கமுண்டு
சலனமில்லா தன்மைஒத்து எக்கானும்
சிந்தையதை பரத்தின்பால் தானியற்றி
செம்மைசெய் சாதனையும் பின்வரும்

தாரணை

ஒதக்கேள் அட்டாங்க யோகவழி
ஒப்பற்ற எட்டெட்டும் இதனுள்ளே
ஆதரவாய்த தானறியின் அனுபான நல்
ஆயகலை யாவினுக்கும் மூலமொக்கும்

ஓக்கவே அணிகாதி சித்திகளும்
ஊள்ளபடி தானறிய இதனுள்ளே
தக்கநல் மணிமந்திர ஒளடதயோகம்
தாட்டியமாய்க் கைக்கொள்ளும் அட்டியில்லை

ஆட்டியில்லை இதனள்ளே ஒர்சூக்குமம்
அறியக்கேள் கற்பகோடி கற்பமுறை
ஒட்டியே அவரவர்தம் உட்குலத்து
உள்ளபடி அங்கிசாரு அமிர்தமுண்டு

உள்ளபடி தானறிய தாரணையும்
ஊண்டதோர் அமுதவொட்டி தான்கூடி
கண்டிடவே மைந்தனுக்கு இதனுள்ளே
கற்பமுறை ஆறுவகை தான்கேளாய்

கேட்கவே மந்திரத்தால் ஞானசித்தி
கிர்திசார் ஒளடத்ததால் தேகசித்தி
மாட்சியுள்ள ஞானத்தால் யோகசித்தி
மகத்தான முன்றுவழி சர்வசித்தி

சாதனையால் இதுவிதியும் மென்மேலும்
சாயுஜ்யம் தனையொட்டி எண்ணம்மிக
ஆதரவாய் பயிற்சிவழி எய்தவரும்
அரியதோர் சாலோப சாரூப

சாரூப சாமீப சாயுஜ்யம்
சர்ந்துவரும் காலத்தே யோகநிலை
தேறவே பலபடவாய் தெளிவுவரும்
சிப்பெருமை அக்காலம் தானுணர

உணரவே இதுகாறும் உரைத்ததொப்ப
ஒப்பற்ற யோகவழி நிலைநாட்ட
கர்ணாதி சுத்தியுடன் எக்கணமும்
காலத்தே யோகவழி நிற்றல்மேலாம்

ஒதக்கேள் தாரனையின் அதிசூக்மம்
ஒப்பள்ள குண்டலியை தனைஒத்து
ஆதரவாய் சூக்ம நாடி மேல்ஏறி
அறியதோர் கபாணம்தன் எல்லைஒத்து

ஒத்துத்தான் நாடியின் வண்ணிவாயு
உள்ளபடி அழுத்தமாய் மேல்ஏற
மெத்தவே தபோஅக்னி ஞானஅக்னி
மேலான ஜால்ராக்னி தனைஒத்து

ஓத்துத்தான் விழிமூடி நிஷ்டைசெய்ய
ஒப்பறிய வாயுவது தான்அடங்கி
மெத்தவே மேல்நிற்க அக்காலம்
மேலான கபாலத்துள் அமிர்தமது

அமுதமது உள்நாக்கின் நிலைஒத்து
அறியக்கேள் துளிதுளியாய் தான் சொட்ட
குமுதமென குவிந்துள்ள மனதுள்ளே
குற்றமில்லா அமுததுளி பாய்ந்தவுடன்

பாய்ந்தவுடன் மயக்கமுள்ள லாகிரியாயர்
பகரக்கேள் அக்கனத்தில் பசிதாகம்
பந்தமாய் இந்நிலையும் தான்இன்றி
இயம்பக்கேள் நன்நிலையாய் தானிருக்க

இடரில்லை சாதனா முறைஒத்து
இயம்பக்கேள் நன்நிலைகள் தானறிய
திடமுடனே தாரனையும் இவ்வாராய்
திகழவே இதன்ஒத்து மறுயோகம்

சமாதி

சூக்மத்தை  தானறிய மைந்தனிவன்
சேப்பவே இதுநூலின் குரவன்வழி
ஆக்கமுடன் இதன்ஒத்து தீட்சைஒட்டி
அறியமேல் பயிர்ச்சியதும் அட்டியில்லை

உண்டப்பா கர்ப்பம் நிகர்ப்பம்
உரைக்கமேல் சங்கம் சமுத்திரம்
கண்டிடவே இதுநான்கின் தத்துவங்கள்
காட்டுவோம் சமாதிஒத்து முன்றுநிலை

ஒத்துத்தான் திரிகரணம் தனைகட்டி
உள்ளபடி அவாவெகுளி மயக்கங்கள்
மெத்தவே தான்அகற்ற சமாதிவழி
மேலான பலாபலன்கள் மெத்தவுண்டு

உண்டதுவே திரிகரண சுத்தத்தால்
ஊப்பள்ள அந்தங்கள் ஆறினையும்
கண்டிடவே இவன்தனக்கு மார்க்கமுண்டு
கருதவரும் மனமதை செம்மைகூட்டி

கூட்டிவே ஒர்நிலையில் ஓர்நிரையில்
குற்றமில்லா மனோலயம் தனைஒத்து
நாட்டமுடன் சுழிமுனையில் எண்ணம்ஏற
நவிலக்கேள் மனமடங்கும் அட்டியில்லை

ஒத்துத்தான் முக்கலையின் தத்துவததை
உள்ளபடி சாதனையின் ஆக்கத்தால்
மெத்தவே தானறிய மென்மேலும்
மேலான வைராக்யநிலை மேலாய்

ஆயவே சுவாசநிலை தனைஒத்து
ஆப்பனே சீரளவு தனைஒட்டி
நேயமுடன் பூரகமொடு கும்பகமும்
நவிலபின் ஸ்தம்பனமும் தானறிந்து

ஆறிந்துதான் உள்ளோடும் வாயுதன்னை
அப்பனே உள்முகமாய் தான்தெளியின்
தெரியவே குண்டலிமுதல் கபாளம்வரை
திகழவரும் சூக்மநாடி தனைஒட்டி

ஒட்டிவே தசவாய்வில் இவன்தனக்கு
ஒப்பற்ற ஒர்வாயு உள்இழுக்க
கிட்டிடவே இதயம்மற்றும் மலக்குடல்
கருதபின் மண்ணீரல் கல்லீரல்

ஈரல்மற்றும் தமணியுடன் உப்புசங்கள்
இணையில்லா கருணாதி தான்தழுவி
சீருரவே அவ்வாயு கபாளதில்
செப்பகேள் அவானனாய் தானடங்க

அடங்கவே இவ்வுணர்வு தான்தெளியின்
அப்பனே அக்கணத்தே சமாதிநிலை
திடமுடனே தான்ஒடுங்கும் நிலைஒட்டி
தெளிவிப்போம் வருமூன்று படலங்களில்

சமாதிநிலை தனைஒத்து ஒர்சூக்மம்
சாற்றகேள் சிலவிதிகள் தானறிய
அமைதியுடன் பேரமைதி தனைஒட்டி
அறியமேல் பெருமௌனம் தான்காக்க

காக்கவே சமாதியில் ஜந்துண்டு
கருதபின் மூன்றதுவே சிறப்போக்கம்
ஒக்கவே பிரத்யூசமாதி தனைஒத்து
ஒப்பற்ற அக்னிசமாதி அப்புசமாதி

சமாதியாம் ஜீவசமாதி வாயுசமாதி
சாற்றகேள் இதன்ஒத்து மூன்றுநிலை
இமைநாட்டம் இல்லாத விண்ணவர்க்கும்
எட்டாத இதுசூக்மம் மாந்தர்க்கே

மாந்தர்க்கே உண்டதனால் ஒதுவித்தோம்
மகத்தான காரண காரியமொடு
பாந்தமாய் யோகவழி தானறியின்
பகரகேள் இதுனுள்ளே அனந்தமுண்டு

உண்டதுவே இதுவிதியும் கல்பசமாதி
உள்ளபடி தானறிய இடரில்லை
கண்டிடவே மாந்தர்தம் நிலைஒத்து
காட்டினோம் கருவுக்கு கருபொருளே

சித்தவைத்தயர் யார்?

எவனொருவன் தன்னுடைய சித்ததை கட்டுபடுத்தி வைக்கின்றானோ அவனே சித்த வைத்தியன்.

இருப்பவன் பயந்து சாகிறான்
இல்லாதவன் துனிந்து சாகிறான்

போங்குகின்ற காமம் என்ன? சிவத்தின் கூறு
பொல்லாத ஆசை என்ன? மாலின் கூறு
மயங்குகின்ற மோகம் என்ன? மகேசன் கூறு.
—–சட்டைமுனி நாயனார்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன் ஆகுல நீர பிற.                                          —–திருவள்ளுவர்